சபையில் சபாநாயகருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் வாக்குவாதம்

Published By: Gayathri

04 Dec, 2020 | 05:47 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தோல்வியுற்ற அரசா? அல்லது அரசாங்கமா? என்ற விடயத்தில் நேற்று சபையில் சபாநாயகருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டத்தில்  கைத்தொழில், வர்த்தக அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதன்போது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்,  அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை தொடர்பில் தெரிவிக்கும்போது வடகொரியாவின் பொருளாதார நிலைக்கே எமது பொருளாதாரம் செல்லும். அது தோல்வியடைந்த அரசு என தெரிவித்திருந்தார். 

சஜித் பிரேமதாசவின் பேச்சு நிறைவடைந்ததும் சபாநாயகர், உங்களது பேச்சில் தோல்வியடைந்த அரசு என தெரிவித்தீர்கள். அதனால் அந்த வார்த்தையை நீக்குகின்றேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து, சஜித் பிரேமதாச எழுந்து 'நான் ஒருபோதும் தோல்வியுற்ற அரசு என தெரிவிக்கவில்லை. தோல்வியுற்ற அரசாங்கம் என்றே தெரிவித்தேன்' என்றார்.

அதனைத்தொடர்ந்து சபையில் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுந்து, 'தோல்வியுற்ற அரசு என தெரிவித்திருந்தால், அதனை எந்த அடிப்படையில் நீக்கமுடியும்? அதனை நீக்குவதற்கான நிலையியற் கட்டளை என்ன? இது தோல்வியுற்ற அரசு என நான் எனது பேச்சில் தெரிவித்தால் அதனை உங்களால் எப்படி நீக்கமுடியும்? அது எனது நிலைப்பாடு. சட்டத்தின் பிரகாரம் எனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கின்றது' என்றார்.

அதனைத்தொடர்ந்து இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேக எழுந்து, 'இலங்கை தோல்வியடைந்த இராஜ்ஜியம் என காண்பிக்க தேவையாக இருக்கின்றது. அதனால்தான் பொன்னம்பலம் எம்.பியும்  ஆதரவாக பேசுகின்றார்' என்றார். 

மீண்டும் எழுந்த சஜித் பிரேமதாச, 'எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. என்னால் தனித்து செயற்படும் அளவுக்கு எனது முதுகெலும்பு உறுதியாக இருக்கின்றது' என்றார்.

இறுதியில் சபாநாயகர், 'சரி, நீங்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் அதனை விட்டுவிடுவோம்' என தெரிவித்து சபையை தொடர்ந்து கொண்டு சென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18