தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சாடுகிறார் சிவாஜிலிங்கம்

Published By: Digital Desk 4

04 Dec, 2020 | 05:45 PM
image

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புரெவி புயல் மாவீரர்நாள் காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் தாக்கியிருந்தால் தான் மகிழ்ந்திருப்பேன் என்று சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அதேபோல ஆறு ஆயிரம் பேரே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபை இரண்டு கட்டங்களாக வெளியிட்ட அறிக்கையில் இறுதிப்போரில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

சரத்பொன்சேகா தற்போது சொல்லியிருக்கின்ற கருத்தின் ஊடாக அவர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான எண்ணம் கொண்டவர் விடுதலைப்புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள் என்று தெரிவித்த சிவாஜிலிங்கம், சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ் மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலின் போது கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நீங்கள் உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஜித் பிரதேமதாஸவும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு கோரியிருந்ததையும் சிவாஜிலிங்கம் நினைவுபடுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36