பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் 10 பெண் தொழிலாளர்களை குளவி தாக்கியதில் குறித்த தொழிலாளர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது இன்று காலை 11 மணி அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான 10 பெண் தொழிலாளர்களுள் ஆறுபேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதுடன், நான்கு பேர் தொடர்நதும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.