தொழில் திணைக்களத்தின் அலுவலகங்களின்   மூலம் சேவைகளை வழங்க தீர்மானம்

Published By: Digital Desk 4

04 Dec, 2020 | 05:45 PM
image

(க.பிரசன்னா)

பொது மக்களுக்கு தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதற்காக தொழில் திணைக்களம் நாடு பூராகவுமுள்ள தொழில் திணைக்களத்தின் அலுவலகங்களின் மூலம் சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட்- 19 வைரஸ் தொற்றினை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் மற்றும்  தொலை நிலை வேலை ஏற்பாடுகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, தொழில் திணைக்களமானது தொழில் திணைக்களத்தின் அலுவலக இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள தொலைத் தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி நாடு பூராகவும் உள்ள தொழில் அலுவலகங்களின் ஊடாக  பொது மக்களுக்கு தொடர்ச்சியான சேவையை வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் பிரகாரம், பொது மக்கள் தங்களது அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்குரித்துடைய தொழில் அலுவலகத்திற்கு தொழில் சட்டங்கள் தொடர்புடைய எந்த விடயம் சார்பாகவும் எழுத்து மூலம் முறைப்பாடு அல்லது எழுத்து மூலம் விசாரணையை மேற்கொள்ள முடியும்.

இந்நோக்கத்திற்காக,  அத்தகைய அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பவற்றை தொழில் திணைக்களத்தின் அலுவலக இணையத்தளத்தின்  http://labourdept.gov.lk/images/PDF_upload/notices/contacts%20by%20type.pdf

 ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில்  அமைந்துள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் உரிய எழுத்து மூலமான விசாரணைகளை அட்டவணையில் உள்ள தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி பொது மக்கள் செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடைவிடாத சேவையை  வழங்கும் நோக்கில் அலுவலக நேரங்களில் அலுவலகத்திற்கு நிறைவேற்றுத் தரத்திலுள்ள அலுவலர்களுக்கு வருகின்ற உள்வரும் அழைப்புக்களை  அவர்களது கையடக்கத் தொலைபேசிக்கு  மாற்றக் கூடிய வசதிகளை தொழில் திணைக்களம் வழங்கியுள்ளது அத்துடன் தொழில் திணைக்களத்தின் அலுவலக இணையத்தளத்திற்குச் சென்று  http://labourdept.gov.lk/images/PDF_upload/notices/contacts.pdf  என்ற இணைப்பின் ஊடாக அத்தகைய அலுவலர்களுடன் தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் பிரகாரம், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தயவு செய்து அலுவலகத்திற்கு வருவதனைத் தவிர்த்து அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் மு.ப. 8.30  இலிருந்து பி.ப. 4.15 மணி வரை வழங்கப்பட்டுள்ள தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02