கொவிட்-19 தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து : நால்வர் காயம்

Published By: Vishnu

04 Dec, 2020 | 11:41 AM
image

(செ.தேன்மொழி)

மட்டகளப்பு - புனானை சிகிச்சை நிலையத்திற்கு கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அழைத்துச் சென்ற பஸ் பிரிதொரு பஸ்சுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வைரஸ் தொற்றாளர்கள் இருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசேலபுர பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் கொழும்பிலிருந்து புனானை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு தொற்றாளர்கள் ஏற்றிச் சென்ற பஸ் , காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை பகுதியை நோக்கி சென்ற பிரிதொரு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த சாரதிகள் இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த பஸ்ஸில் 23 தொற்றாளர்கள் காணப்பட்டதுடன் அவர்களில் இருவரும் காயமடைந்துள்ளனர்.

தொற்றாளர்கள் அனைவரும் மீண்டும் பாதுகாப்பான முறையில் புனானை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30