மெக்ராத்தின் ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இரு இலங்கை வீரர்கள்

Published By: Vishnu

04 Dec, 2020 | 11:28 AM
image

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் க்ளென் மெக்ராத் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் 5 பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மாத்தரமே பெயரிடப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்காக 250 ஒருநாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 1999, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று உலக கிண்ண வெற்றிகளை கண்ட அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்தார்.

இந் நிலையில் ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள மெக்ராத் முதலிடத்தில் பாகிஸ்தான் அணி வீரரான வசிம் அக்ரமை பெயரிட்டுள்ளார்.

அக்ரம், தனது 19 ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 356 போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சுல்தான் ஆஃப் ஸ்விங்' என்று புகழப்பட்ட வாசிம் அக்ரம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் ஆவார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான வசிம் அக்ரம் 1992 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அட்ட நாயகன் விருதை பெற்றதுடன் தொடரில் அதிகம் விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

பட்டியலில் இரண்டாம் இடத்தில் தனது நண்பரான பிரட் லீ யை பெயரிட்டுள்ளார் மெக்ராத்.

பிராட் லீ தனது புகழ்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 380 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், மெக்ராத்துடன் இணைந்து 2003 மற்றும் 2007 உலகக் கிண்ணத் தொடர்களிலும் அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார்.

அடுத்தபடியாக பட்டியலில் மூன்றாம் இடத்தில் மெக்ராத் இலங்கை அணி வீரர் சமிந்த வாஸை பெயரிட்டுள்ளார்.

தனது 14 ஆண்டுகால ஒருநாள் வாழ்க்கையில் சமிந்த வாஸ் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் தனக்கென தனியிடம் பிடித்த அவர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் போது ஹட்ரிக் சாதனையையும் புரிந்துள்ளார்.

அதேவேளை 50 வயதான ஷென் பொல்லார்கை தனது நான்காவது வீரராக பட்டியலில் பெயரிட்டுள்ளார் மெக்ராத்.

பொல்லாக் ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். வலது கை வேகப் பந்து வீச்சாளரான பொல்லாக் ஒருநாள் அரங்கில் மொத்தமாக 303 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

பட்டியலில் இறுதி இடத்தில் மெக்ராத் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை பெயரிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முரளிதரன் ஆவார். முரளிதரன் 350 ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மெக்ராத்தின் முதல் 5 ஒருநாள் பந்துவீச்சாளர்களில் சுழற்பந்து வீச்சாளர்களில் முரளிதரன் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31