கமலா ஹரிஸின் உள்நாட்டுக் கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நியமனம்

Published By: Vishnu

04 Dec, 2020 | 10:28 AM
image

அமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் வியாழக்கிழமை இலங்கை-அமெரிக்கர் ரோஹினி கொசோக்லுவை தனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமித்தார்.

ரோஹினி கொசோக்லு அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து நிபுணர் மட்டுமல்ல, செனட் சபை உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் எனது நெருங்கிய மற்றும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவராகவும் இருந்தார் என்றும் கமலா ஹரிஸ் கூறினார்.

ரோகினி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களாவர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளாரான கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராகப் ரோஹினி கொசோக்லு பொறுப்பேற்றார். 

இதன்போது அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு தலைமைப் பணியாளர் பதவியை வகித்த ஒரே அமெரிக்க ஆசியப் பெண் என்ற பெருமையையையும் அவர் பெற்றார்.

ரோஹினி கொசோக்லு, ரோஹினி மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். மிச்சிகன் செனட்டர் டெபி ஸ்டெபெனோ சார்பில் பணியாற்றும்போது கடிதத் தொடர்பு மேலாளராக அரசியலில் நுழைந்தார்.

பட்டம் பெற்ற பின்னர் ஸ்டீபெனோவின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவர் கொலராடோ செனட்டர் மைக்கேல் பென்னட்டின் கீழ் ஒரு மூத்த சுகாதார ஆலோசகராக பணியாற்றினார். அந்த நேரத்தில் ஒபாமா கெயார் திட்டத்திலும் பணியாற்றினார்.

ஏழு ஆண்டுகள் பென்னட்டின் அலுவலகத்தில் பணியாற்றிய ரோஹினி, அப்போது செனட்டர் கமலா ஹரிஸின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று தற்போது அமெரிக்க துணைத் தலைவரின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராகவும் தரம் உயர்ந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13