இங்கிலாந்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது கறுப்பின ஆண் துணைக்காக குரல் கொடுக்கும் வெள்ளை இனப்  பெண் தொடர்பான காணொளி ஒன்று சமூகத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவரை இங்கிலாந்து பொலிஸார் மடக்கிப் பிடித்து தரையில் வீழ்த்தி விலங்கிட்டு அவரது தலையை ஒரு முகமூடியால் மூடுவது குறித்த காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.