புரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேர்ந்த 4007 பேர் பாதிப்பு ; சமல் ராஜபக்‌ஷ 

Published By: Digital Desk 4

03 Dec, 2020 | 10:23 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

புரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேந்த 4007பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 15 வீடுகள் பூரணமாகவும் 170 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன என நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அரசியலில் பரபரப்பு ! சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து, புரெவி சூறாவளி தாக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக தெளிவூட்டும் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புரெவி சூறாவளி 2ஆம் திகதி இரவு 10.30மணிக்கும் 11.30 மணிக்கும் இடையில் இலங்கையின் வடகிழக்கு கடற்கரை பிரதேசமான திரியாய் மற்றும் குச்சவெலி ஊடாக இலங்கைக்குள் வந்தது.

புரெவி சூராவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்த யாழ்ப்பாணம், கிளிநோச்சி, முல்லைதீவு,வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, புத்தளம், குருநாகல், அம்பாறை மாவட்டங்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தற்போது கிடைத்திருக்கும் அறிக்கையின் பிரகாரம் சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த மாவட்டங்களில் சூராவளியால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகும்  மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் 4 பாதுகாப்பு நிலையங்களும் திருகோணமலையில் 49, மன்னாரில் 8, முல்லைத்தீவில் 4 என மொத்தமாக 65 பாதுகாப்பு  நிலையங்கள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தன. 

அதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் 134 குடும்பங்களைளச் சேர்ந்த 522 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 628 குடுங்களைச் சேர்ந்த 1949 பேரும் மன்னார் மாவட்டத்தில் 324 குடும்பங்களைச் சேர்ந்த 1114 பேரும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேருமாக மொத்தமாக இந்த மாவட்டங்களில் இருந்து 1009 குடும்பங்களைச் சேந்த 4007பேர் பாதுகாப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். 

மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 551 குடும்பங்களைச் சேந்த 1904 பேர் இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 வீடுகள் பூரணமாகவும் 170 வீடுகள் குறைந்தளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

இதன்போது எழுந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிரமலநாதன், மன்னார் மாவட்டத்தில் பல மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் படகுகளும் சேதமடைந்திருக்கின்றன. அதேபோன்று 1258 குடும்பங்கள் நிர்க்கதியாகி இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க  மாவட்ட செயலாளருக்கு உடனடியாக அறிவிக்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த செல்வம் அடைக்கலனாதன், நிர்க்கதியாக பாதுகாப்பு நிலையங்களில் இருப்பவர்களும் சமைத்த உணவு வழங்கவே நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் அங்கு தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால் சமைப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் அதற்கு மாற்று திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்றார்.

உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40