நாட்டைக் கடந்தது புரெவி சூறாவளி : யாழிலில் ஒருவர் மாயம்

Published By: Digital Desk 4

03 Dec, 2020 | 10:21 PM
image

(எம்.மனோசித்ரா)

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல் இன்று வியாழக்கிழமை மாலையில் நாட்டை கடந்து பயணித்தமையால் ,  இலங்கையின் நிலப்பரப்புக்களில் பாதிப்புக்கள் குறைவடையக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் கொழும்பிலிருந்து புத்தளம் , மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புக்களில் நாளை காலை வரை மீன் பிடி நடவடிக்கைகளிலும் கடற்படை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய கடற்பகுதிகளில் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதே வேளை இன்று வியாழக்கிழமை காலை வரை கிளிநொச்சி மாவட்டத்தில் 200 மீல்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டிருந்த புரெவி சூறாவளி நேற்று புதன்கிழமை இரவு 10.30 - 11.00 மணிக்கும் இடையில் இலங்கையின் கடல் பகுதியிலும் உச்சவெளிக்கும் இடையில் நாட்டிற்குள் பிரவேசித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. இதன்போது காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமிட்டர் வரையில் இருந்ததுடன், அது படிப்படியாக மணித்தியாலயத்திற்கு 90 கிலோமிட்டர் வரையில் அதிகரித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நேற்று புதன்கிழமை திருகோணமலை கடற்பரப்பிற்கு வடகிழக்கு திசையில் புரெவி புயல் நிலைகொண்டிருந்ததன் காரணமாக இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை நாட்டில் 6 மாவட்டங்களில் 12 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10 336 பேர் 79 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணம்

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களில் 3554 குடும்பங்களைச் சேர்ந்த 12 161 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதோடு , 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கடும் காற்று மற்றும் மழை என்பவற்றின் காரணமாக 15 வீடுகள் முழுமையாகவும் 173 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. ஏனைய 9 கட்டடங்களில் சிறியளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இம் மாகாணத்தில் 2047 குடும்பங்களைச் சேர்ந்த 7778 பேர் 27 தற்காலிக நலன்புரி நிலையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் 829 குடும்பங்களைச் சேர்ந்த 2986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள ஒருவரே காணாமல் போயுள்ள நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு 15 வீடுகள் முழுமையாகவும் 152 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இரு கட்டடங்கள் சிறிதளவில் சேதமடைந்துள்ளன. இங்கு 139 குடும்பங்களைச் சேர்ந்த 539 பேர் 5 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இம்மாவட்டத்தில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேர் 4 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் 2236 குடும்பங்களைச் சேர்ந்த 7749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இங்கு 1778 குடும்பங்களைச் சேர்ந்த 6795 பேர் 18 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று வவுனியாவில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில்

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகளவான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இங்கு 864 குடும்பங்களைச் சேர்ந்த 2558 பேர் 52 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

200 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி

புரெவி புயலின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதற்கமைய நேற்று வியாழக்கிழமை பாலை 8.30 மணிவரை கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்தில் 279.8 மி.மீ. , சாவகச்சேரியில் 260 மி.மீ , யாழ்ப்பாணத்தில் 245.1 மி.மீ., கிளிநொச்சியில் 233.9 மி.மீ., முல்லைத்தீவில் 224 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09