நந்திக்கடலில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் மாயம்

Published By: Digital Desk 4

03 Dec, 2020 | 09:01 PM
image

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நேற்று (02) காலை முதல் முல்லைத்தீவு  மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வந்ததுடன், நேற்றைய தினம்(02) மாலை  முதல் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் இன்றும் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து  இன்று காலை 10.00 மணிக்கு குறித்த வள்ளத்தை கரைக்கு கொண்டு வருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்து செல்லப்பட்ட  வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி  காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளில் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவரே காணாமல் போயுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து கடற்படையினர் இராணுவத்தினர் மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் குறித்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04