யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது

Published By: J.G.Stephan

03 Dec, 2020 | 05:12 PM
image

யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சா காரில் கடத்திய இருவர் மட்டக்களப்பில் கைது 

யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு காரில் கேரளகஞ்சாவை கடத்திய இருவர் மட்டக்களப்பில் வைத்து இன்று வியாழைக்கிழமை (03.12.2020) அதிகாலை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வைத்து குறித்த காரை மடக்கிபிடித்து காரில் சூட்சகமாக மறைத்துவைக்கப்பட்ட நிலையில், 2 கிலோ 200 கிராம் கொண்ட கேரளா கஞ்சாவையும் கார் ஒன்றையும் மீட்டுள்ளனர். 

கைதானோர், பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கஞ்சா வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரனையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17