மஹர சிறைச்சாலை சம்பவத்தின் விசாரணைக் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் -  செஹான்

Published By: Digital Desk 4

03 Dec, 2020 | 05:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தை   கொண்டு  எதிர்க்கட்சியினர் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாட்டை   தோற்றுவித்துள்ளார்கள். விசாரணை குழுவின் அறிக்கை  மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என  சமுர்த்தி, நுண்நிதி கடன்  இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுர பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான  வரவு - செலவு திட்டம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில்  தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கீடு செய்யும் நிதி குறித்து ஆராய விசேட பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவு திட்டத்தை கொண்டு அரசியல்  ரீதியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள்.இன்று மஹர சிறைச்சாலை   சம்பவத்தை  பற்றிக் கொண்டார்கள்.

மஹர சிறைச்சாலை அமைதியின்மை  எதிர்பாராத வகையில் இடம்பெற்ற ஒரு சம்பவமாகும்.

மஹர சம்பவத்தின் பின்னணியில் அரசியல். நோக்கம் உள்ளது என எதிர்தரப்பினர் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள். சம்பவம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும்.

நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிமுறைகள் வரவு - செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14