கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது: வெடிபொருட்களும் மீட்பு

Published By: J.G.Stephan

03 Dec, 2020 | 04:32 PM
image

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி எனும் கிராமத்தில் சில வெடிப்பொருட்கள் நபர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த வீடு இன்று இராணுவத்தினர் பொலிஸார், புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தயானுஜன் அம்பிகா (35 வயது), சிங்கராஜா தயானுஜன் (29 வயது), செல்வநாயகம் ராசமலர் (வயது 67), குலசிங்கம் புவனேஸ்வரி (வயது 62) என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  அத்தோடு பல மணிநேர தேடுதலின் பின்னர் பல வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30