வசாவிளான்,பலாலியில் மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அங்கஜன்

03 Dec, 2020 | 01:55 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மாகாணத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 33,861 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை எனத்தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான அங்கஜன் இராமநாதன், வசாவிளான்,பலாலி  பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்களை  மீளக்குடியேற்ற நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,

யுத்தத்தால் அழிவுகளை சந்தித்த வடக்கு மாகாணத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் அதிக சனத்தொகையையும் கொண்டுள்ளன. எனவே வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிக கவனம் வடக்கு மாகாணத்துக்கு தேவை.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில்  தேர்தலை மையப்படுத்தி வீடமைப்புத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதற்கொடுப்பனவு மட்டுமே வழங்கப்பட்டது. இதனை நம்பி மக்கள் இருந்த வீடுகளையும் உடைத்துவிட்டு வங்கிகளிலும் வட்டிக்கும் கடன்பட்டதுடன் நகைகளை அடகுவைத்தும் சேமிப்பு பணங்களை   செலவழித்தும்  விட்டு இன்று மிகுதிக்கொடுப்பனவுகள் கிடைக்காது  நடு வீதியில் நிற்கின்றனர்.

2018-2019 ஆம் ஆண்டு ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் 160 மாதிரிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டு 3,830 வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் எதுவும் பூர்த்தியாகவில்லை. அந்த வீடமைப்புக்கான மிகுதிப்பணமாக 1190 மில்லியன் ரூபா கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

இதேபோன்று கிளிநொச்சி  மாவட்டத்தில் 95 மாதிரிக்கிராமங்க ள் உருவாக்கப்பட்டு 3,677 வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் எதுவும் பூர்த்தியாகவில்லை. அந்த வீடமைப்புக்கான மிகுதிப்பணமாக 1,878 மில்லியன் ரூபா கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

ஆனால் இந்த அரசில் யாழ் மாவட்டத்தில் ''வசந்த புரம் '' வீடமைப்புத்திட்டம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த வருடம் ஏனைய வீடமைப்புத்திட்டங்களும் பூர்த்தி  செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் 23,096 குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் தேவையாகவுள்ளன. இதில் 12,856 வீடுகள் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கும் மிகுதி வீடுகள் நலன்புரி நிலையங்களில் இருப்பவர்கள், இடம்பெயர்ந்துள்ளவர்கள், வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு தேவையாக உள்ளன.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் 7,563 வீடுகள் யுத்தத்தால் சேதமடைந்த நிலையில் இருப்பதனால் இவர்களுக்கு திருத்த வீட்டுத்திட்டம் தேவை. அத்துடன் 12,000 பேர் காணிகள் இல்லாத நிலையில் உள்ளனர்.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 10,772 வீடுகள் தேவையாகவுள்ளன. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இன்னும் மீள் குடியேற்றம் பூர்த்தியாக்கப்படவில்லை. இன்னும் பல பகுதிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் .குறிப்பாக வசாவிளான், பலாலிப்பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58