பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியாக குஷானி ரோஹணதீர நியமனம்

Published By: Vishnu

04 Dec, 2020 | 08:07 AM
image

சட்டத்தரணி திருமதி. குஷானி ரோஹணதீர அவர்கள் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அவர்களின் பரிந்துரைக்கு அமைய, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியாக பணியாற்றிய நீல் இத்தவல அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி. குஷானி ரோஹணதீர அவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.  

திருமதி. ரோஹணதீர அவர்கள் 2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாக (நிர்வாகம்) பதவி வகித்ததுடன், 1999 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அதிகாரியாக இலங்கை பாராளுமன்ற சேவைக்கு இணைந்துகொண்டார்.  

அம்பலாக்கொட தர்மாஷோக்க வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார். அதனை அடுத்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இளமானிப்பட்டத்தை பூர்த்தி செய்த இவர் சட்டக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றி சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30