உலகின் பாரிய சவால்

Published By: Gayathri

03 Dec, 2020 | 12:11 PM
image

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2 ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலைவரப்படி, 64,834,951 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,934,851 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்கத்திற்கு  இதுவரை 1,499,175 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

இன்று, இங்கிலாந்தில், பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளைத் திறந்து, தேசிய கட்டுப்பாடுகளை முடித்துவிட்டோம்.

அதிகப்படியான நம்பிக்கையுடன் நாம் கொண்டு செல்லப்படாமல் இருப்பது முக்கியம். கொரோனாவுக்கான போராட்டம் முடிந்துவிட்டது என்ற அப்பாவியான நம்பிக்கையில் மக்கள் இருக்கக்கூடாது.

எப்படி இருந்தாலும், தடுப்பூசி இறுதியாக விநியோகிக்கத் தொடங்கும் போது மிகப்பெரிய சவால்கள் இருக்கும். மருந்துகள் 70 டிகிரி செல்சியசில் சேமிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் மூன்று வாரங்கள் இடைவெளியில் இரண்டு ஊசி தேவைப்படுகிறது. எனவே கிட்டத்தட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாக்கப்படுவதற்கு தவிர்க்க முடியாமல் சில மாதங்கள் ஆகும்” என்று கூறியுள்ளார்.

இதேவேளை பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் அளித்த பரிந்துரையை இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அடுத்த வாரம் முதல் பைசர் கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

கூடவே கொரோனா தடுப்பூசிகள் சர்வதேச குற்றவாளிகள் கும்பல்களால் குறிவைக்கப்படலாம் என இன்ர்போல் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இன்டர்போல் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜூவர்ஜின் ஸ்டாகாக் கூறுகையில்,

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளில் நுழைந்து தடுப்பூசி விநியோக சங்கிலியை சீர்குலைக்க குற்றச்செயலில் ஈடுபடுவோர் திட்டமிடுகின்றனர். 

இந்த குற்றவாளிக் கும்பல் போலியான இணையதள பக்கங்கள் மூலமாகவும், போலியான தகவல்கள் மூலமாகவும் பொதுமக்களை குறிவைக்கின்றனர். இது பொதுமக்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாகும் என்று கூறியுள்ளார். 

உலக போரைப் போன்று உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ்தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். இன்றேல் இந்த அழிவில் இருந்து  உலக நாடுகள் மக்களை காப்பது இயலாத காரியமாகிவிடும்

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குறணை கிராமமும் பொது மக்களின் சவால்களும்

2024-03-29 16:46:00
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48