நாட்­டு­ மக்கள் ஆட்­சி ­மாற்­றத்­தையே விரும்­பு­கின்­ற­னர். அதன் வெளிப்­பாடு பாத­யாத்­திரை ஊடாக உல­கிற்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் உண்­மையை வெளிப்­ப­டுத்த விடாது ஊட­கங்கள் மிகவும் மோச­மான முறை யில் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ள­ாக்­கப்­ப­டு­கின்­றன என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

பாத­யாத்­தி­ரையை குழப்­பு­வ­தற்கு முயற்­சிகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் கொழும்­பை­நோக்­கி­செல்­வ­தை­யா­ராலும் தடுத்­து­வி­ட­மு­டி­யாது. பொது­மக்கள் எம்­முடன் உள்­ள­மை­ உ­ல­கிற்­கு­ வெளிப்­பட்­டுள்­ளது. ஆக­வே ­த­டை­க­ளை­ க­டப்­பது கடி­ன­மா­ன­வி­ட­ய­மல்ல எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்­டு­எதிர் கட்­சியின் அர­சாங்­கத்­திற்­கு­எ­தி­ரா­ன­பா­த­யாத்­திரை இரண்­டா­வது நாளாக நேற்று வெள்­ளிக்­கி­ழமை உத்­து­வன்­கந்­தை­ப­கு­தியில் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது அதில் கலந்­து­கொண்­டு­உ­ரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­ப­தி­ம­ஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு கூறினார். அங்­கு­அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

பொது­மக்கள் வாழ்­வா­தா­ர­பி­ரச்­சி­னை­க­ளை­எதிர் கொள்­கின்­றனர். என­வே­நல்­லாட்­சி­அ­ர­சாங்­கத்­திற்­கு­எ­தி­ரா­க­நாங்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுப்­ப­டு­கின்றோம் ஆனால் அர­சாங்கம் எம்மை முடக்­கு­வ­தற்கு பல்­வேறு முயற்­சி­க­ளை­மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. பொது­மக்கள் ஆட்­சி­மாற்­றத்­தை­வி­ரும்­பு­கின்­றனர். எமக்கு எதி­ரா­க­வாக்­க­ளி­த­த­வர்கள் கூட இன்­று­ பா­த­யாத்­தி­ரையில் கலந்துக் கொண்­டு ­அ­ர­சாங்­கத்­திற்­கு­எ­தி­ரா­க­குரல் கொடுக்­கின்­றனர்.

என­வே­மாற்றம் தேவை என்­ப­து­வெளிப்­பட்­டுள்­ளது. அதனை பெற்றுக் கொள்­ள­போ­ரா­ட­வேண்டும். கொழும்பில் பாத­யாத்­திரை முடியும் போது­நாட்டின் அனைத்­து­மக்­களும் எம்­முடன் இருப்­பார்கள்.

ஆனால் உண்­மை­களை வெளியி­ட­வி­டாது அர­சாங்கம் ஊட­கங்கள் மீது­அ­ழுத்தம் கொடுத்­து­வ­ரு­கின்­றது. இந்­த­நி­லை­மா­ற­வேண்டும். ஆட்­சி­யா­ளர்கள் சட்­டத்­தை­கையில் எடுத்­து­செ­யற்­ப­டு­கின்­றனர். பொலிசார் மக்­க­ளுக்கு பாது­காப்­பு­வ­ழங்­கி­சட்ட ஒழுங்­கு­களை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும். ஆனால் இன்றுதலைக்கீழான சூழலே காணப்படுகின்றது. ஆனால் மக்கள் என்னுடன் இருக்கின்றனர். எனவே தடைகள் பல்வேறு வழிகளில் ஏற்படுத்தப்படலாம். அவற்றைவெற்றிக் கொள்வோம்.இதனை எதிர்த்துபோராடி குரல் கொடுக்கும் போது இன்னோரன்ன அவதூறுகள் எமக்கு எதிராகமுன்வைக்கப்படுகின்றது. அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.