கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் வந்த சிலரே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.