புரவிப் புயலின் தாக்கம் முல்லைத்தீவில் : வீதிகளில் மரங்கள் சரிவு ; கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு !

Published By: Digital Desk 4

02 Dec, 2020 | 06:24 PM
image

புரவிப் புயலின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

காற்றின் வேகமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.

காற்றின் வேகம் காரணமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதி ஓரமாக இருந்த  மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்து உள்ளது.

இதனால் சற்று நேரம் வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், பொதுமக்கள், பொலிசார் மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்கள்.

தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டுள்ளது. படையினரும், பொதுமக்களும், பிரதேச சபையினரும் இணைந்து குறித்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்கள்.

தொடர்சியாக கடல் அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது இதேவேளை கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் நடவடிக்கையில் பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்று இரவு கரையை கடக்க இருக்கின்ற புயலால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர் கொள்ளக்கூடிய வகையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருடன் முப்படையினரும் இணைந்து பணியாற்றி வருகின்றார்கள். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்டளையிடும் அதிகாரியாக மாவட்ட செயலாளர் க.விமலநாதன்  திணைக்கள உத்தியோகத்தர்களை வழிநடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கரையோரங்கள் ,மற்றும் தாழ்நில பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்த  படுகின்றார்கள்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் தயார் நிலையில் 24 மணி நேரமும் கடமையாற்ற ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58