கைவிடப்பட்ட பாடசாலை அபிவிருத்திகளை அரசாங்கம் பூர்த்தியாக்க வேண்டும் : வே. இராதாகிருஷ்ணன்

Published By: J.G.Stephan

02 Dec, 2020 | 05:10 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


எமது ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் முழுமைப்படுத்த வேண்டும் எனவும், ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரி அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே. ராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்,

கல்வி இராஜாங்க அமைச்சராக நான் கடமையாற்றிய காலத்தில் பல நல்ல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமுடன் இணைந்து பல்வேறு பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். ஆனால் நாம் ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் இன்னமும் முழுமையடையாத நிலையே காணப்படுகின்றது.

எமது ஆட்சியில் அபிவிருத்தி செய்ய ஆரம்பித்த பாடசாலைகள் அபிவிருத்தி வேலைகள் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வடக்கு கிழக்கு, மற்றும் மலையக பாடசாலைகள் அபிவிருத்தி எனக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதில் மலையக பாடசாலை வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததால் ஆசிரியர் நியமனம் கவனம் செலுத்தப்பட்டது. இதில் தாமதங்கள் பல ஏற்பட்டன. ஆனால் நியமனங்களை நாமே வழங்கினோம். அதில் இப்போதைய அரசாங்கம் பெயர் பதித்துக்கொள்ள முடியாது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இந்த பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே இதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எனினும் கடந்த ஆட்சியில் மாதிரி பாடசாலைகள் மூன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக 400 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இடமும் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் அதனை உருவாக்க இடமளிக்கவில்லை.

எனவே இந்த ஆட்சியில் இந்த மாதிரி பாடசாலைகளை உருவாக்க இடமளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் ஜப்பான் அரசாங்கத்துடன் செய்துகொண்ட பொது இணக்கப்பாட்டுடன் பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இது முற்று முழுதாக நன்கொடையில் உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனையும் கைவிடாது முன்னெடுக்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31