தேசிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் ஐ.தே.க.வின் முறையற்ற பொருளாதாரக் கொள்கையே- திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 4

02 Dec, 2020 | 05:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற  பொருளாதார முகாமைத்துவ கொள்கையின் காரணமாகவே தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

கிழக்கின் ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண | Virakesari.lk

இலங்கை மன்ற கல்லூரியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

2005 தொடக்கம் 2014 வரையிலான காலப்பகுதியில்  ஆட்சியில் இருந்த அரசாங்கம் பாரிய சவால்களை  எதிர்கொண்டது. 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு அபிவிருத்தி நிர்மாணபணிகள்  முன்னெடுக்கப்பட்டன. குறித்த காலப்பகுதியில்  தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி முன்னேற்றமடைந்த நிலையில் காணப்பட்டது. 

நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி முறையற்ற பொருளாதார முகாமைத்துவ  கொள்கையினை  செயற்படுத்தியது. தேசிய  உற்பத்திகள் திட்டமிட்ட வகையில் அழிவுக்கு கொண்டு வரும் நிலையில் காணப்பட்டது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. எதிர்காலத்தில்  பொருளாதார மட்டத்தில் ஏற்படவுள்ள சவால்களை வெற்றிக் கொள்ளும் வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10