வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

Published By: Vishnu

02 Dec, 2020 | 12:08 PM
image

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை நாளை தொடக்கம் விடப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37