மத்திய கிழக்கு முழுவதும் அதிர்வலைகள் ; பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

Published By: Vishnu

02 Dec, 2020 | 11:27 AM
image

ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதேவின் படுகொலையானது மத்திய கிழக்கு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெட்கக்கேடான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ஈரான், பதிலடி கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது. 

குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இல்லை என்றாலும், ஃபக்ரிசாதேவின் மரணம் முன்னர் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட ஒரு முறைக்கு பொருந்துகிறது.

 ஈரானில் உள்ள அதிகாரிகளுக்கு எதிரான நகர்வுகளின் நீண்ட பட்டியல் மற்றும் அதன் அணுசக்தி திட்டமானது தனது இருப்புக்கு ஆபத்தானது என்று இஸ்ரேல் கருதுகிறது.

இந் நிலையில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி வெள்ளிக்கிழமை அணுசக்தி இயற்பியலாளர் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டினார். 

எனினும் இஸ்ரேல் மறுப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளதுடன், அந் நாட்டு புலனாய்வு அமைச்சர் எலி கோஹன் இந்த கொலைக்கு பின்னால் யார் உள்ளார்கன் என்று தெரியவில்லை என திங்களன்று கூறினார்.

இந்த கொலையின் பின்னணியில் இஸ்ரேலின் ஈடுபாடு ஓரளவு தெளிவாகத் தெரிகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்கள் மீதான தாக்குதல்களை கடந்த தசாப்தத்தில் மீண்டும் மீண்டும் இஸ்ரேல் நிகழ்த்தியுள்ளன.

அதன்படி, ஈரானிய அணு விஞ்ஞானி கொலைகளின் தொடர்ச்சியாக ஃபக்ரிசாதேவின் கொலை மிகச் சமீபத்திய சம்பவம் மட்டுமே. 

தெஹ்ரானின் அணுசக்தி வளர்ச்சியை பின்னடைவு செய்வதற்கான வெளிப்படையான நோக்கத்துடன், 2010 மற்றும் 2012 க்கு இடையில் நான்கு ஈரானிய விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17