மஹர மரணங்கள்

Published By: Priyatharshan

02 Dec, 2020 | 04:40 PM
image

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரமும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமும் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் 11 விளக்கமறியல் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் அவர்களின் உற்றார் உறவினர்கள் அழுது புலம்புவதைக் காணமுடிகின்றது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு சிறைக் காவலர்களுடன் முரண்பட்டதுடன் சிறைச்சாலை வாயில்களை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும் இதனையடுத்து, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்றபட்டதாகவும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த கலவரங்களின் காரணமாக 11 கைதிகள் உயிழந்ததுடன் சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர். 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக உண்மை நிலை  கண்றியப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறே பல்வேறு தரப்பினரும் சுயாதீன விசாரணைகளை நடத்தி உண்மை நிலையை கண்டறியுமாறு கேட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலை சம்பவத்தை படுகொலை சம்பவமாகவே பார்ப்பதாகக் கூறும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு அதுதொடர்பில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

இவ்வமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா, கைதிகளின் கோரிக்கை நியாயமானது எனவும் தமது உரிமைகளைக் கோரும்போது நிராயுதபாணிகளான கைதிகள் மீது தோட்டாக்களால் பதிலளிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள கலவரத்தில் கண்ணுக்கு தெரியாத சக்தி ஒன்று உள்ளதாகவும் சிறைச்சாலைக்குள் கலவரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் திட்டமிட்ட முயற்சி ஒன்றே இடம்பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளளே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் இச்சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் செயலாளர் தலைமையில் விசாரணைகளை நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதில் எமக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. விசாரணைகள் சுயாதீனமான வகையில் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என கூறியுள்ளார்.

 இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்ட்டிருந்த கைதிகளின் உறவினர்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று முன்தினம் வீதிக்கு வந்த அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

ஏற்கனவே கொரோனா காரணமாக நாட்டில் மரணங்கள் தொடர்ந்து கொண்டு இருக்க, அதனை அதிகரிக்கும் வகையில் வன்முறைகளும் மரண ஓலங்களும் மென்மேலும் தொடருமானால் அது முழு நாட்டுக்குமே அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையகங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21