வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கோப் குழுவின் இரண்டாவது அறிக்கை இன்று பாராளுமன்றில்

Published By: Vishnu

02 Dec, 2020 | 08:06 AM
image

வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இம்முறை வரவுசெலவுத்திட்டம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பது இந்த அறிக்கையின் ஊடாகத் தெளிவுபடுத்தப்படும். 

குறித்த அறிக்கையின் இறுதி வரைபு குறித்து கலந்துரையாடுவதற்கு பாராளமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு நவம்பர் 30 கூடியது. 

இதில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ த சில்வா, டிலான் பெரேரா மற்றும் இசுறு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கல்வி போன்று அதிக நிதி அவசியமான துறைகளில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்கால திட்டமிடலில் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள இக்குழு இணக்கம் இதன்போது தெரிவித்தது. 

இலங்கை தொடர்பில் புதிய புள்ளிவிபரங்களை இந்த அறிக்கையில் இணைத்துக்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்பைப் பெற குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா சுட்டிக்காட்டினார். 

இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைத்து குழு உறுப்பினர்களும் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35