பவளவிழா காணும் இசையாளர் ஏ.கே. கருணாகரன்

Published By: Gayathri

02 Dec, 2020 | 05:08 PM
image

 இசையை நேசிப்பவர்கள் கருணாகரனை நேசிக்காமல் இருக்க முடியாது. ராகங்களை இரசிப்பவர்கள் கருணாகரனின் ராக ஆலாபனையை இரசிக்காமலிருக்க முடியாது. இசையை கற்றவர்கள் அவரின் துதி பாடாது இருக்க முடியாது. 

ஈழத்து இசை பாரம்பரியத்தில் குழந்தைகளுக்கு இசையை கற்பித்து இசை வல்லுனர்களாக்கியவருள் முதன்மையானவரும் அவரே.

தனது இசை வாழ்வில் பல வருட சாதனைகளை நிகழ்த்தி இன்று 75 ஆவது பிறந்தநாளில் காலடி பதித்த அவரை நன்றி கூறும் கடப்பாடு இசையை நேசிப்பவர்கள் யாவர்க்கும் உரியதாகும்.

குண நலன் சான்றோர் நலனே என்றவாறும் தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண்ணோடுவர் மேன் மக்கள் என்றவாறும் வாழும் அன்னார் இயற்கையான இசை ஞானத்துடன் யாழ். கரவெட்டியில் பிறந்தார். 

பள்ளிப்படிப்புடன் கர்நாடக இசையையும் கற்றார். இராமநாதன் இசைக் கல்லூரியில் அதிபராக பணியாற்றிய இசை மேதை மகாராஜபுரம்வி. 

சந்தானத்திடம் சிஸ்யனாக அமையும் வாய்ப்பு ஒரு திருப்பு முனைதான். அங்கு 4 வருடங்களில் சங்கீதரத்தினம் பட்டம்பெற்ற பின் சந்தானத்தின் வழிகாட்டலில் சென்னை இசைக் கல்லூரியில் கற்கும்போது பிரபல இசை மேதைகளான செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், திருமதி ரி.பிருந்தா அம்மையார், தஞ்சாவூர் ரி. எம். தியாகராயன், பாலக்காடு கே.வி. நாராயணஸ்வாமி, ரி.கே. கோவிந்தராவ் ஆகியோரிடம் கற்கும் அரிய வாய்ப்பைப்பெற்றார்.

எனினும், இசை மேதை மகாராஜபுரம் வி.சந்தானத்திடம் பிரத்தியேகமாக பயின்று தனது இசையாற்றலை சிறப்பாக்கியதுடன் அவரது இசைப்பாணியில் பாடும் சிறப்பும் பெற்றார். மேலும், சென்னை வானொலியில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்திய இலங்கையர் எனும் பெருமையையும் பெற்றார். 

தற்போதும் சென்னையில் மார்கழி இசைவிழாவில் இசைக் கச்சேரிகள் அளிப்பதும் எமக்கு பெருமைதான். இசையாளராக இலங்கைக்கு மீண்ட போது இலங்கை வானொலியில் இசைத்துறை தயாரிப்பளராக பதவி கிடைத்தது.

அத்துடன்10 வருடங்கள் தமிழ் இசை வாத்தியகுழு இயக்குனராகவும் பங்களிப்பு நல்கினார். பின்பு இராமநாதன் இசைக் கல்லூரியில் இசை விரிவுரையாளராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு பல மாணவர்களை இசை வல்லுனர்களாக உருவாக்க காரணமாக அமைந்தது.

அங்கிருந்து சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக பணியாற்ற அழைக்கப்பட்டார். அங்கு பணியாற்றிய காலத்தில் பல நாடுகளில் இசைக் கச்சேரிகளுக்காக செல்லும் சந்தர்ப்பத்தைப் பெற்றமை பெரும்பேறாகும்.

சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய பின் சுவாமி விபுலானந்தர் நிறுவகத்தில் சிரேஸ்ட இசை விரிவுரையாளராக பணியாற்றினார். 

மேலும் ஆலாபனா சங்கீத சபா எனும்இசை வளர்ச்சி நிறுவனம் மூலம் இந்திய இலங்கை இசையாளர்களின் இசை நிகழ்வுகளை நடத்தி வருகிறார் என்பது யாவரும் அறிந்ததே. 

அன்னாரை கெளரவிக்கும் வாய்ப்பை லயநாதாலயா பெரும் பேறாகக் கருதுகின்றது. மேலும் பல்லாண்டுகள் சிறப்புற வாழ எம்மிறைவன் பார்வதி பரமேஸ்வரனை வேண்டி அமைகிறேன்.

வை.வேனிலான்.

“லயநாதாலயா”, கொழும்பு-5

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13