தோட்ட வைத்தியசாலைகளை தேசிய சுகாதார கட்டமைப்பில் இணைக்க வேண்டும்: வேலுகுமார் கோரிக்கை

Published By: J.G.Stephan

01 Dec, 2020 | 02:54 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை தேசிய சுகாதார கட்டமைப்பில் இணைப்பதற்கான முன்மொழிவை கடந்த அரசாங்க காலத்தில் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளோம். சுகாதார அமைச்சர் இதுகுறித்து கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முழு நாடும், மக்களும் எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினையாக கொவிட் பரவல் உள்ளது. இதனை அரசியல் மயப்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டாலும் இந்தப் பிரச்சினை எவ்வளவுதூரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதென அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் கலாசார பண்பாட்டுக்கமைய கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பர்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். இதனை அரசியல் பிரச்சினையாக்கி இழுபறி நிலைக்கு தள்ள வேண்டாம்.

மேலும் பெருந்தோட்டத்துறையின் சுகாதார நடவடிக்கைகள் மிகவும் கீழ்மட்டத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. எது சுகாதார அமைச்சருக்கு நன்றாகத் தெரியும். பெருந்தோட்டங்களில் காணப்படும் தோட்ட வைத்தியசாலைகளை தோட்ட வைத்திய உதவியாளர்கள்தான் நடத்துகின்றனர். பெருந்தோட்டத்துறையின் சுகாதார நிலை குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தின் போது சுகாதாரத்துறைக்கு குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் மூலம் தீர்வுகாணும் முயற்சிகளை எடுத்திருந்தோம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவின் முன்னெடுப்பில் சுகாதார அமைச்சில் உள்ள அதிகாரிகள் உட்பட துறைசார்ந்தவர்களை அழைத்து ஏற்படுத்த வேண்டிய தீர்வை இனங்கண்டோம். குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்ப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் தோட்டங்களில் 450 வைத்திய அலகுகள் இனங்காணப்பட்டன. அதில் 50 அலகுகளை அரச அமைப்பாக நடத்த ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மிகுதியையும் அரசாங்கம் உள்வாங்கி எவ்வாறு நடத்த வேண்டுமென்பது அறிக்கையில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் சுகாதார அமைச்சர் இதுகுறித்து கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32