முஸ்லிம் சமூகம் கொராேனாவால் இரட்டிப்பு வேதனையை அடைகிறது: முஷாரப் ஆதங்கம்

Published By: J.G.Stephan

01 Dec, 2020 | 03:15 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
இனவாதிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக மட்டும் இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்பதற்கு விசேட வைத்தியர் குழுவின் சில உறுப்பினர்கள் உதாரணமாகவுள்ளனர். அத்துடன் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு உலக சுகாதார ஸ்தாபனத்திலுள்ள நிபுணர்களை விடவும் சிறந்த நிபுணர்களா?கேட்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொரோனா முதலாவது அலையில் கொரோனாவை சிறப்பாக முகாமை செய்து எமது மக்களை காத்தமைக்காகவும் இரண்டாவது அலையிலும் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றமையாலும் சுகாதார அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பாதுகாப்புத்தரப்பினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம் .

 கொரோனா ஏற்படுத்தியிருக்கும் அழிவு சாதாரணமானதல்ல. இலங்கையில் எல்லாத்துறைகளும் சீரழிந்து  நிலையில் நாம் எல்லோருமாக சேர்ந்துதான் இந்த நாட்டைக்கட்டியெழுப்ப வேண்டும்.

அத்துடன் இனவாதம் என்பது ஒரு தேர்தலை வெற்றி கொள்ள நமக்கு வாய்ப்பாக அமையலாம் .ஆனால் இனவாதம் என்பது ஒரு நாட்டை வளர்ச்சியடையச் செய்ய ஒருபோதும்  பங்களிக்காது என்ற யதார்த்தத்தை இந்த சபையிலுள்ள சகல உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு நிபுணர்களைக் கொண்ட உலக சுகாதார ஸ்தாபனம் ,யுனெஸ்கோ போன்ற அமைப்புக்கள் தொழில்நுட்ப விடயத்தில் உலகுக்கே வழிகாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் தொடர்பிலும்  வழிகாட்டுதல்களை  வழங்கியுள்ளபோதும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் எரிக்கப்படும் விடயம் பெரும் துயரமாக மாறியுள்ளது.

ஜனாஸாவை நல்லடக்கம் செய்யலாம் என்ற விவகாரம் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் முஸ்லிம்கள் இவ்வாறு நல்லடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்படுவதன் பின்னணியில் அரசின் சுகாதாரத்துறையினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பிழையான வழிகாட்டுதல்களினால் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் மத,கலாசார நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்து போய்க்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் கொரோனா பாதிப்பால் இரட்டிப்பு பாதிப்பை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த அரசியலில் உள்ளவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இந்த கொரோனா தாக்கத்தினால் ஏற்படுகின்ற  இறப்பை விடவும் இறந்த உடல்களை எரிப்பதனால் வருகின்ற வலி முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் வலியாக இருக்கின்றது. எனவே இந்த நிபுணர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உலக சுகாதார ஸ்தாபனத்திலுள்ள நிபுணர்களைவிடவும் சிறந்த நிபுணர்களா? என்ற கேள்வியை இங்கு நான் எழுப்ப விரும்புகின்றேன். 

ஜனாதிபதி ,பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உணர்வுகளை மதித்து நல்லடக்கம் செய்யலாம் என்று கூறியுள்ள நிலையில் இந்த நிபுணர்களை காரணம் காட்டி தொடர்ந்தும் தவறிழைக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56