திருகோணமலை, வெருகல் பிரதேச வீடொன்றில்  தங்க நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.    

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதி வீடொன்றில் தங்க நகை திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கிணங்க குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.    

சந்தேகநபரை, தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.