வடக்கு வைத்தியசாலைகள் அரசினால் திட்மிட்டு புறக்கணிக்கப்படுகின்றன : குற்றஞ்சாட்டுகிறார் விநோ

Published By: J.G.Stephan

01 Dec, 2020 | 01:11 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


அரசியல் காரணங்களுக்காகவும், மாகாண சபைக்கு கீழான நிர்வாகத்தில் இருப்பதனாலும்  திட்டமிட்டே வடக்கு வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சபையில் குற்றம் சாட்டினார்.



அவர் மேலும் கூறுகையில், வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்திய அரசினால் 350 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் விபத்து சிகிச்சை பிரிவிற்கான அதி நவீன கட்டிடப் பணி இன்னும் முற்றுப்பெறவில்லை. 33 மாடிகளைக்கொண்ட அச்சிகிச்சைப்பிரிவின் கீழ்தளம் மட்டும் முடிவுற்ற நிலையில் அவசர அவசரமாக  கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அவசர சிகிச்சைப் பிரிவிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மீதி நிதிக்கான வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மாகாண சபைக்கு கீழான நிர்வாகத்தில் இருப்பதனாலும் அரசியல் காரணங்களுக்காகவும்  திட்டமிட்டே  இந்நிதி விடுவிக்கப்படாமல் இருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சு  அதிகாரிகள் பொறுப்பற்ற பதில்களை சொல்லிக்கொண்டிருப்பதாக மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். மேல் தள வேலைகள் முடிவுறுத்தப்படாதமையினால் கீழ்தளத்துக்கு நீர் கசிவு கூட ஏற்பட்டு நோயாளிகளை சீராக பராமரிக்கவோ, சிகிச்சையளிக்கவோ முடியாதுள்ளது. எனவே 350 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கான மிகுதி நிதியை சுகாதார அமைச்சர் உடனடியாக  விடுவித்து இரண்டாம் கட்ட கடுமான ப்பணிகளை  நிறைவ செய்து தர வேண்டும். அது மட்டுமன்றி வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையும் சட்ட வைத்திய அதிகாரி அறையும் மிகவும் பாழடைந்த நிலையிலேயே உள்ளன. இவற்றை நவீனப்படுத்த மத்திய அரசிடம்  நிதிக்கான கோரிக்கைகள் தொடர்ந்தும் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது கவனத்தில் எடுக்கப்படவில்லை. இதற்கு தேவையான அண்ணளவான  மதிப்பீடான 120 மில்லியன் ரூபா நிதியினை வழங்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இவ்வைத்தியசாலையில் மருத்துவ உ பகரணங்களை  திருத்தம் செய்யவும் புதிய மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யவும்  சமையலறை,தொழிலாளர் அறை  திருத்தம் செய்யவும் போதிய நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறும் கோருகின்றேன். அத்துடன் மாகாண பொது சுகாதார ஆய்வு கூடத்துக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தித்திட்டத்துக்கான நிதியையும் விடுவித்துக்கொடுக்க வழியேற்படுத்த வேண்டும். வவுனியாவிலுள்ள பிரதேச வைத்தியசாலைகளான பூவரசங்குளம் ,நெடுங்கேணி,செட்டிகுளம், வைத்தியசாலைகளில் உட்கட்டுமான அபிவிருத்திகளையும் அடுத்த ஆண்டில் செய்து கொடுக்க   நிதி ஒத்துக்குமாறும் சுகாதார அமைச்சரைக் கோருகின்றேன். வடக்கு மாகாண நிர்வாகத்துக்குரிய வைத்தியசாலைகள் என்பதனால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட வேண்டாம் எனவும் கோருகின்றேன்.

இதேவேளை சுகாதாரத்துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு உள்ளது. மாவட்ட வைத்தியசாலையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் கூட இங்குள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு கிடையாது. அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இல்லாத ஒரு  மாவட்ட வைத்தியசாலையாகவே இது உள்ளது. பொது மருத்துவ சிகிச்சைப்பிரிவில் குறைந்த பட்சம் 6 வைத்தியர்கள் இருக்கவேண்டிய நிலையில் 3 பேர் மட்டுமே நிரந்தர சேவையில் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 60 வைத்திய அதிகாரிகளில் 32 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்கான மருத்துவ ஆளணி 129 ஆக இருக்கின்ற நிலையில் 71 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். வைத்திய நிபுணர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 18 ஆக இருக்கின்றபோதும் 8 வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே இருக்கின்றார். குழந்தை வைத்திய நிபுணர்களை இருவர் இருக்க வேண்டிய இடத்தில் எவருமே இல்லாதுள்ளனர். மகப்பேற்று நிபுணர்,சத்திரசிகிச்சை  நிபுணர், கதிரியக்க  நிபுணர்கள் இல்லை. போதிய அம்புலன்ஸ் களும் இல்லை. இதே நிலைதான் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும் உள்ளது.

2013 ஆம் ஆண்டின் பின்னர்  ஆளணி மீளாய்வு செய்யப்படவில்லை. வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆளணி மீளாய்வு செய்து அனுப்பிய போதும் சுகாதார அமைச்சு கவனம் எடுக்கவில்லை. அரசியலில் ஈடுபட்ட வைத்தியர்கள் பலர் இன்று அரசியலிலும் இல்லை வைத்தியத்துறையிலும் இல்லை .இவ்வாறானவர்களை  மீளவும் வைத்திய சேவையில் இணைப்பதன் மூலம்  வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56