மஹர சிறைச்சாலை கலவரம்: சேர்லொக் ஹோம்ஸ் பாணியில் கதைகளை புனைந்து உண்மையை மறைக்கவேண்டாம்..!

Published By: J.G.Stephan

01 Dec, 2020 | 11:30 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் உண்மை நிலையை கண்டறியவேண்டும். அதற்காக உடனடியாக சுயாதீன விசாரணைக்குழு அமைக்கவேண்டும். அரசின் கீழ் இருக்கும் கைதிகளின் சாதாரண கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்தது ஜனநாயகத்தை மதிக்கும் அரசுக்கு நல்லதில்லை என எதிர்க்கட்சியினர் நேற்று சபையில் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுந்து,

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ள கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் தகவல் பிரகாரம் 8பேர் உயிரிழந்துள்ளதுடன் , 53பேர் காயமடைந்துள்ளனர். சிறைக்கைதிகள் அரசின் பொறுப்பில் இருக்கின்றவர்கள். அவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.

மஹர சிறையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திடீரென இடம்பெற்றதொன்று அல்ல. சிறைச்சாலைக்குள் கொவிட் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் இருந்தே இந்த குழப்பநிலை அங்கு இருந்தது. தங்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்து, வைத்தியசாலைகளில் அனுமதிக்குமாறே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அரசின் கீழ் இருக்கும் சிறைக்கைதிகளின் இந்த சாதாரண கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. 

அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதால் அங்கிருக்கும் அதிகமான கைதிகளின் வழக்கு விசாரணை, தாமதப்பட்டிருக்கின்றது. அதனால் அந்த கைதிகளின் இருக்கவேண்டிய காலத்துக்கும் அதிக காலம் இருந்து வருகின்றதால், அவர்களுக்கு கொவிட் ஏற்படும் என்ற அச்சம் இருக்கின்றது. இதுவரை 183பேருக்கு கொவிட் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர்கள் அங்கு பிரச்சினைப்படுத்தி இருக்கின்றார்கள். அந்த பிரச்சினைக்கே தீர்வு தேவை. அவ்வாறு இல்லாமல் சேர்லொக் ஹோம்ஸ் பாணியில் கதைகளை உருவாக்க தேவையில்லை என்றார்.

 அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், சிறைச்சாலையில் கொவிட் கொத்தணி இடம்பெற்ற பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 183பேருக்கு கொவிட் ஏற்பட்டுள்ள நிலையில், இவர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?. மற்ற சிலைச்சாலைகளிலும் கொவிட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன் ஏற்பாடுகள் என்ன?. 

அதனால் மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் செயலாளர் தலைமையில் விசாரணை நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதில் எமக்கு திருப்தியடைய முடியாது. விசாரணைகள் சுயாதீனமாக, பக்கச்சாரப்பின்றி இடம்பெறவேண்டும். அதற்கு சுயாதீன விசாரணைக்குழு அமைத்து, இதன் பின்னணியை தேடிப்பார்க்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் வேலுகுமார் எம்.பி,தெரிவிக்கையில், கண்டி போகம்பர சிறைச்சாலை அபிவிருத்தி நடவடிக்கைக்காக 4 வருடமாக மூடப்பட்டிருந்தது. திடீரென அங்கு 800 கைதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 150க்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சிறைச்சாலை காவலாளர்கள் கண்டி நகருக்கு சென்று வருகின்றனர். 2மாதத்துக்கு முன்னர் கண்டி நகரில் கொவிட் இருக்கவில்லை. ஆனால் தற்போது அங்கும் பரவி இருக்கின்றது. சுமார் 150பேருக்கே அங்கு தங்கி இருக்க வசதி இருக்கின்றது. 800பேரை தங்கவைக்கப்பட்டுள்ளதன் மூலம் பிரச்சினை அதிகரிக்கலாம். அதனால் இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50