ஒரு மாதகாலத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய 934 பேர் கைது

Published By: R. Kalaichelvan

01 Dec, 2020 | 12:42 PM
image

(செ.தேன்மொழி)

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த ஒருமாதகாலத்தில் 934 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் பத்து பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளும் , அட்டுலுகம மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிகளில் சில கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த பகுதிகளில் வசிக்கும் அனைவரையும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை, முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்று காலை ஆறுமணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த  அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 934 கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசித்து வருபவர்கள் உரிய சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அதற்கமைய பயணக்கட்டுபாட்டுக்கமைய செயற்படுதல், சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய செயற்படுதல் என்பன கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இதன்போது சுகாதார பிரிவினர் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினால் உடனே அதனை செய்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21