30 வருட பூர்த்தியை கொண்டாடிய Ma’s ஃபூட்ஸ்

Published By: Priyatharshan

29 Jul, 2016 | 03:02 PM
image

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட Ma’s நிறுவனம், இன்று இலங்கையின் முன்னணி குடும்ப உணவு தீர்வு வழங்குநராக வளர்ச்சியடைந்துள்ளது. 

உயர் தரமானதும் உடனடியாக உட்கொள்ளக்கூடியதுமான உணவு வகைகளை மட்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் வழங்கிவரும் அங்கீகாரத்துடன், குடும்பத்திற்கு சொந்தமான இந் நிறுவனமானது சமூகத்தின் மீதான அதன் அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக நிரூபனம் செய்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சான்றளிக்கப்பட்ட வகையில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையான உற்பத்திகளை அறிமுகம் செய்ததன் விளைவாக, Ma’s Kitchen ஆனது இலங்கை முழுவதும் உள்ள சேதன மற்றும் சான்றளிக்கப்பட்ட சிறிய விவசாய குழுக்களை ஒருங்கிணைத்து வருகிறது.

சான்றளிக்கப்பட்ட தரங்களுக்கமைய உணவுகள் உற்பத்தி செய்வதை விஞ்சிடும் வகையில் organic மற்றும் ‘fair’ trade திகழ்கிறது. சமூக தொழில் முனைவோர் குடும்பத்திற்கு சமூகம் மற்றும் இயற்கை மீதான வாழ்நாள் அர்ப்பணிப்பு மிகப்பெரியது. எமது நிறுவனத்தை ஸ்தாபிக்கும் போது இந்த கோட்பாட்டின் மீதே நாம் நம்பிக்கை வைத்திருந்ததுடன், இந்த மரபினை அடுத்த தலைமுறையினருக்கும் வழங்க எண்ணியுள்ளோம். 

தம்புள்ள, மாத்தளை, மினுவங்கொட, ஹக்மன ஆகிய பிரதேசங்களிலுள்ள வெவ்வேறு கிராமிய விவசாய சமூகத்தினருடன் இணைந்து நாம் பணியாற்றியதையிட்டு பெருமையடைவதுடன் எமது புதிய திட்டத்தை வடக்கின் இயக்கச்சியில் ஆரம்பித்துள்ளோம்” என Ma’s Kitchen இன் முகாமைத்துவ பணிப்பாளர் மரியோ அல்விஸ் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியைத் தாண்டிய பேண்தகைமை என்பதற்கமைய ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனத்தின் கோட்பாட்டுக்கிணையாக, இந் நிறுவனமானது நாட்டின் உணவு பதப்படுத்தல் மற்றும் விவசாய வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் செயலாற்றி வருகிறது. 

இலங்கை உணவு பதப்படுத்துநர் சங்கம் மற்றும் தேசிய வேளாண் வர்த்தக சபை ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினராக Ma’s  திகழ்கிறது. இந்த நிறுவனம் அதன் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு, கடந்த 26 ஆம் திகதி “நிலையான உணவு வர்த்தகம்” எனும் செயலமர்வினை முன்னெடுத்திருந்தது. 

இந்நிகழ்வில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விசேட நிபுணர்களுடன் பல்வேறு தலைப்புகளின் கீழ் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. 

தனியார் துறை மற்றும் அரசாங்க திணைக்களங்களைச் சேர்ந்தவர்களிடம் தகவல்களை பகிர்ந்து விழிப்புணர்வூட்டுவதே இந்நிகழ்வின் எதிர்பார்ப்பாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் நான்கு முக்கிய தலைப்புக்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. அதற்கமைய, ஐரோப்பாவின் முன்னணி மற்றும் வெற்றிகரமான சேதன வர்த்தக நிறுவனமான Do-IT இன் ஸ்தாபகரான பொப்பே ப்ராமினால் உலகளாவிய சேதன உணவு நிலைமைகள் மற்றும் அதன் தற்போதைய போக்குகள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பிலான ‘உலகளாவிய சேதனச் சந்தை’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

“உலகளாவிய நியாயமான வர்த்தகச் சந்தை’ தலைப்பிலான கலந்துரையாடலை ஐரோப்பாவின் மிகவும் பழைமை வாய்ந்த Fairtrade நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளரான நெதர்லாந்து ஃபெயார் ட்ரேட் ஒரிஜினலைச் சேர்ந்த மார்ட்டின் பூன் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். 

மேலும் மூன்றாவது தலைப்பான ‘சமூக வர்த்தகம்’ எனும் கலந்துரையாடலை ஜப்பான் முழுவதும் உள்ள இளம் சமூக தொழில் முனைவோருக்கான வசதிகளை ஏற்படுத்தி ஜப்பானின் ஒழுங்குமுறையான வர்த்தகத்திற்கு புத்துயிர் அளித்த அந்நாட்டின் புகழ்பெற்ற வர்த்தக குழுமத்தின் தலைவரும், சமூக தொழில் முனைவருமான ஜப்பான் மாற்று ஊடகத்தைச் சேர்ந்த கட்டோகாவினால் தலைமை தாங்கப்பட்டிருந்தது. இறுதி கலந்துரையாடலான ‘நவீன உணவு வர்த்தகத்திற்கான சமூக இணக்கப்பாட்டின் பெறுமதி’ எனும் தலைப்பினை தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் ஒழுங்குமுறையான மற்றும் நிலையான வர்த்தகங்களின் மீது முதலீடு செய்வதில் முன்னோடியான இந்தியாவின் புகழ்பெற்ற சமூக சமத்துவ நிதியான அவிஷ்கார் ஃரொன்டயர் நிதியத்தைச் சேர்ந்த சன்ஜயன் சக்ரபோர்தி தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58