அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் லொறியொன்றின் மீது இனம்தெரியாதோர் தீ வைத்ததில் லொறி தீப்பற்றி முற்றாக எரிந்து சேதமடைந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வேளாண்மை மற்றும் உரம் மருந்து விற்பனை கடையின் உரிமையாளரின் லொறியை இவ்வாறு எரிந்துள்ளது.

கடைக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் லொறி தீப்பிடித்து எரிவதாக அயலில் உள்ளவர்கள் லொறி உரிமையாளருக்கு தெரிவித்ததையடுத்து, அயலவர்கள் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் 

இதேவேளை தீயில் எரிந்த லொறி தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசனின் சகோதரனின் லொறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.