சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்

30 Nov, 2020 | 08:06 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க  அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய இராஜாங்க அமைச்சர் இன்று (30) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான இராஜாங்க அமைச்சு புதிய இராஜாங்க அமைச்சாகும்.

ஆரம்ப சுகாதார சேவைகளை மிக உயர்ந்த தரத்திற்கு மேம்படுத்தி பராமரிப்பது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மக்களுக்காக, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு உயர் மட்ட சுகாதார சேவையை உறுதி செய்வதற்கு ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதும் விரிவாக்குவதும் அவசியம் என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

கோவிட் 19 நோய் பரவலுடன் அனைத்து தொற்றுநோய்களையும் ஏலவே கண்டறிந்து கட்டுப்படுத்த ஒரு கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காகவே புதிய இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டது.

திருமதி பெர்னாண்டோபுள்ளே முன்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47