கிளிநொச்சியில் 15 பேருக்கு கொரோனா தொற்று  - 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் 

Published By: Digital Desk 4

30 Nov, 2020 | 07:56 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்,

 

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளையும்  ஒரு வாரம் நடத்தாமல் முடக்கி வைத்திருந்தோம், இவற்றையும் நாம் மேற்கொண்டு  செயற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தோம்.

இதன் அடிப்படையில் எமது மாவட்டத்தில் 785 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலிலே உட்படுத்தப்பட்டுள்ளனர் அவர்களில் 458 பேர்களுக்கான மாதிரிகள் பெறப்பட்டு அவர்களில் 13 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரை 15 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22