அம்பாறை தமண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்ப்பத்தான்சேனை பிரதான வீதியில் இன்று காலை 08.00 மணியளவில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் வந்த கன ரக லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளை செலுத்தியவரே மரணமடைந்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் வர்ப்பத்தான்சேனை 01ம் பிரிவைச் சேர்ந்த உதுமாலெப்பை ஸாதிக் (42) என்ற இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவ் விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.