இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை

Published By: Jayanthy

30 Nov, 2020 | 06:16 AM
image

உலகம் முழுவதும் தற்போதுவரை 6 கோடியே 26 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தமது நாட்டில் உருவாகவில்லை என வாதிட்டு வரும் சீனா தற்போது இவ் வைரஸ் இந்தியாவில் தான் உருவாகியிருக்க வேண்டும் என புது கதையை கூறியுள்ளது. 

Chinese scientists examining the genetic code of coronavirus claim to have food evidence that suggests the virus did not originate in their country (file image, a Covid patient in Wuhan)

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போதுவரை உலகளாவிய ரீதியில்  14 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸால்  உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது என சீன அறிவியல் விஞ்ஞானிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில்,-

கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019-ம் ஆண்டு கோடை காலத்தில் (ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம்) தான் கொரோனா உருவாகியிருக்கலாம். கொரோனா வைரஸ் விலங்குகளால் சாக்கடை நீர் மூலம் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. வுகான் நகரில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதில் உண்மை இல்லை.

கோடைகாலத்தில் இந்தியாவில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டால் குரங்குகள் உள்பட விலங்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்படுகிறது. இது நிச்சயம் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கு இடையேயான தொடர்பு அபாயத்தை அதிகரிக்கும். 

அதாசாரண வெப்பக்காற்று மூலம் கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கக்கூடும் என நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இளம் மக்கள் தொகை சில மாதங்களுக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்படாமல் பரவ உதவியுள்ளது.    

ஹூவானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு உண்மையான வைரஸ் அல்ல. விசாரணையில் வங்காளதேசம் , அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷியா அல்லது செர்பியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பலவீனமான பிறழ்வு மாதிரிகள் காணப்படுவதால், அங்கு முதல் தொற்று ஏற்பட்டிருக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pictured: A map showing the nine countries China has blamed for the outbreak of Covid-19

எனினும் சீன விஞ்ஞானிகளின் இந்த தவறான கூற்று ஏனைய நாட்டு விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டேவிட் ராபர்ட்சன் டெய்லி மெயில் பத்திரிக்கையிடம், சீன ஆராய்ச்சி அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் குறித்த நமது புரிதலை சிறிதும் மேம்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் ஹூவானில் தோன்றியதை மறைக்க சீனா ஏனைய நாடுகளை நோக்கி கையை நீட்டுவது இது முதல் முறை அல்ல’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10