கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது : தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு!

Published By: Jayanthy

29 Nov, 2020 | 09:42 PM
image

  • இன்று 496 புதிய தொற்றாளர்கள் பதிவு
  • தம்புள்ளை பாடசாலைகளுக்கு பூட்டு 
  • சிறைச்சாலை கொத்தணி ஆயிரத்தை கடந்தது 
  • நாளை தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் , குணமடைந்தோர் எண்ணிக்கையும் 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில் கொழும்பில் கடந்த ஒரு மாத காலமாக முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று காலையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் புதிதாக முடக்கப்பட்டுள்ளன. 

இதே வேளை கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடந்த திங்கட்கிழமை முதல் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் சில அச்சுறுத்தல் நிலைமைகளினால் கண்டியில் 45 பாடசாலைகளும் , கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்நிலையில் நாளை திங்கட்கிழமை முதல் தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளும் மூடப்படவுள்ளன. அத்தோடு சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு  09 மணி வரை 496 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 23 484 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 17 002 பேர் குணமடைந்துள்ளதோடு , 6373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமை பதிவான இரு மரணங்களுடன் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது.  

தம்புள்ளை பாடசாலைகளுக்கு பூட்டு 

தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை நகரசபை தலைவரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பி.சி.ஆர். பரிசோதனையின் போது மூவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலை கொத்தணி 1000 ஐ கடந்தது 

சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தொற்றாளர்களின் எண்ணிக்கை 1091 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 183 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இனங்காணப்பட்ட அனைவரும் மஹர சிறைச்சாலையில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 386 பேருக்கும் , கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 157 பேருக்கும், சிறை அதிகாரிகள் 58 பேருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளையுடன் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை, கொழும்பு கரையோரம் என்பனவும், கம்பஹா மாவட்டத்தின் ராகமை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகள் நாளை காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மட்டக்குளியில் உள்ள ரந்திய உயன, ஃபேர்கசன் வீதியின் தெற்கு பகுதி, வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன தொடர்குடியிருப்பு, சாலமுல்ல, விஜயபுர ஆகியன தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக தொடர்ந்தும் இருக்கும் என இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19