கான்ஸ்டபிள் மீது வாகனத்தால் மோதி உயிரிழக்க செய்த நபர் கைது!

Published By: Vishnu

29 Nov, 2020 | 01:46 PM
image

(செ.தேன்மொழி)

குருணாகல் - கொபேகன பகுதியில் மணல் கடத்தல் காரர்களால் டிப்பர் வாகனத்தை மோத செய்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கொலைச் செய்து தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

கொபேகன பகுதியில் ஆத்தலவ பகுதியில் நேற்று நள்ளிரவு கொபேகன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  சட்டவிரோதமாக மணல் அகழ்வு சுற்றிவளைப்புக்காக பொலிஸார் சென்றுள்ளனர்.

இதன்போது தெதுருவோயாவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்று தெதுருவோயாவிலிருந்து மணலை ஏற்றி வருவதை அவதானித்த பொலிஸ்  இருவரும் அதனை நிறுத்துமாறு சமிஞ்சை செய்துள்ளனர். 

பொலிஸாரின் சமிஞ்சை தொடர்பில் கவனம் செலுத்தாத டிப்பர் வாகனத்தின் சாரதி , அங்கிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த கான்ஸ்டப்பிள்  நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ரஸ்நாயக்கப்புர- அம்பகம்மன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ,  ரத்னாயக்க என்ற கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர் டிப்பர் வாகனத்துடன் தப்பிச் சென்றிருந்த சாரதியையும், டிப்பர் வாகனத்தையும் கண்டுப்பிடிப்பதற்காக நிக்கவெரட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசேட இரு பொலிஸ் குழுவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

அதற்கமைய இன்று காலை குளியாப்பிட்டி பகுதியில் கைவிடப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது தலைமறைவாகியிருந்த சாரதியை முற்பகல் 11.30 மணியளவில் நிகவெரட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைதுசெய்துள்ளார். 

27 வயதுடைய சந்தேக நபர் நிகவெரட்டிய பகுதியில் வைத்தே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது உயிரிழந்த கான்ஸ்டபிளின் மரண பரிசோதனைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் முனிவுற்றதன் பின்னர் சடலத்தை குடும்பத்தினருக்கு ஒப்படைப்பதுடன், பொலிஸாரின் மரியாதை அணிவகுப்புடன் இறுதி கிரியைகளை செய்யவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32