ஜெனீவா அரங்கில் இலங்கையின் பொறுப்புக்கூறல் ; இராஜதந்திரிகளுடன் முக்கிய கலந்துரையாடல் என்கிறார் சுமந்திரன் 

Published By: Digital Desk 4

29 Nov, 2020 | 01:21 PM
image

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உயிர்ப்புடன் வைத்திருப்பது பற்றி கலந்துரையாடலை இராஜதந்திர தரப்புக்களுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

விசேடமாக, அடுத்த ஜெனீவா அமர்வில் இலங்கை தொடர்பான விடயத்தினை கையாளவுள்ள பிரித்தானியா, கனடா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் இவ்வாறு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் சாதகமாக பரிசீலிப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் பொறுப்புக்கூறலை மையப்படுத்தும் தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாத்துடன் நிறைவுக்கு வருகின்றனது.

இந்நிலையில் இலங்கையின் பொறுப்புக்கூறலை தொடர்ச்தும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது. 

அதனடிகப்படையில், தற்போதைய தீர்மானத்தினை தொடர்ந்தும் நீடிப்பதா இல்லை புதிய தீர்மானமொன்றை கொண்டுவருவதா என்பது பற்றி அதனைக் கையாளவுள்ள  மற்றும் அனுசரணை வழங்கவுள்ள நாடுகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகின்றோம். 

தற்போதைய பிரேரணை நீடிக்கப்படுவதென்றால் அதில் எவ்விதமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும், புதியதொரு பிரேரணை கொண்டுவரப்படுவதாக இருந்தரில் அதில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல்களின்போது இராஜதந்திர தரப்பினரும் சாதமகான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். விசேடமாக எமது நியானமான கோரிக்கைகள் தொடர்பில் அந்தந்த நாடுகளின் தலைநகரில் இவ்விடயங்களை கையாழும் தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இவ்விதமான செயற்பாடுகள் எமக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அத்துடன் ஜெனீவா அரங்கில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. அது பொறுப்புக்கூறலிலிருந்து ஒருபோதும் விலகவும் முடியாது. ஆகவே, அந்த விடயத்தினை உயிர்ப்புடன் வைத்திருப்பதே தற்போது எமது முக்கிய பணியாக உள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19