அக்குரஸ்ஸ - பிட்டபெத்தர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய பெண் உட்பட ஆறு பேரை மாத்தறை மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினர் நேற்று (28) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளர், அதன் முகாமையாளர்கள் மூவர் மற்றும் குறித்த குற்றத்துடன் தொடர்புடைய பெண் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

8 சுற்றுலா விடுதிகளில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் குறித்த சிறுமியை முதலில் துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு, ஏனையவர்களையும் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜுலை 10 ஆம் திகதி சிறுமி காணமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறுமியை 30 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இதுவரையில்  20 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டதோடு,  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.