நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

Published By: Digital Desk 3

28 Nov, 2020 | 03:37 PM
image

(நா.தனுஜா)

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக் கண்டனம் செய்வதாக பேர்ள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து பேர்ள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மாவீரர்நாளாக அனுஷ்டிக்கப்பட்ட நேற்றைய தினம் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணைந்து தமது விடுதலைக்கான போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்கு வந்ததிலிருந்து மாவீரர்நாள் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்துவருகிறது.

உயிரிழந்தவர்களை இந்நாளில் நினைவுகூருவதற்கு கடந்த காலத்திலிருந்து விதிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள் பொதுவானவைதான் என்றாலும், இம்முறை நினைவுகூருவதற்கான முயற்சிகள் பல்வேறு சவால்களுக்கு உட்பட்டிருக்கின்றன.

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.

மிகவும் வலுவாக்கப்பட்டிருக்கும் அடக்குமுறைகள், சர்வாதிகாரப்போக்கிலான ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06