மீண்டும் வெளியாகிறது எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்ஷாக்காரன்'

Published By: Robert

29 Jul, 2016 | 10:52 AM
image

இன்றும், என்றும், என்றென்றும் தமிழக ரசிகர்களின் உள்ளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படம், எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான 'ரிக்ஷாக்காரன்' அதிரடி, காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்து சிறப்பம்சங்ளும்  நிறைந்த 'ரிக்ஷாக்காரன்', தமிழ்  திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் என்று இந்திய அரசின் 'பாரத்' பட்டத்ததையும் பெற்று தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான 'ரிக்ஷாக்காரன்' திரைப்படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் தமிழகத்தில் வெளியாக உள்ளது. சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த 'ரிக்ஷாக்காரன்' படத்தின் டிஜிட்டல்  பதிப்பை வெளியிடுகின்றனர் 'குவாலிட்டி சினிமா' நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி.மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் 'பிலிம் விஷன்' நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு.

'ரிக்ஷாக்காரன்' படத்தின் அனைத்து பாடல்களும் இன்றளவும் எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாக இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் 'ரிக்ஷாக்காரன்' படத்தின் இசையமைப்பாளர் 'மெல்லிசை மன்னர் 'எம்.எஸ்.விஸ்வநாதன். அதுமட்டுமின்றி இந்த படத்தில் தான் மஞ்சுளா கதா நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

"எம்.ஜி.ஆரின் படமானது வெளிவர போகிறது என்று தெரிந்தால் போதும், எப்படியாவது முதல் நாளுக்குரிய டிக்கெட்டை நான் வாங்கி விடுவேன். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தன் நான். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான 'ரிக்ஷாக்காரன்' இன்றளவும் என் மனதில் ஒன்றி இருக்கிறது.  விரைவில் நாம் அனைவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். அந்த விழாவின் முதற் கட்டமாக இந்த  'ரிக்ஷாக்காரன்' படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருக்கிறோம். இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட 'ரிக்ஷாக்காரன்' திரைப்படம், எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'குவாலிட்டி சினிமாவின்'  டி.கே. கிருஷ்ணகுமார்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35