சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

Published By: Digital Desk 3

28 Nov, 2020 | 11:20 AM
image

இலங்கை சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று  விரைவாக பரவுவதைக் கருத்தில் கொண்டு அடுத்த 2 நாட்களுக்குள் 600 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளதென சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடுமையான குற்றங்களைச் செய்ததற்காக சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு பொருந்தாது என  அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மன்னிப்புக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய கைதிகளின் பெயர் பட்டியலை சிறைச்சாலை தலைமையகத்திற்கு விரைவில் அனுப்புமாறு அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சிறை ஆணையர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் அவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

வெலிகடை சிறைச்சாலை, கொழும்பு மெகசின் சிறைச்சாலை, கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, மகர சிறைச்சாலை, குருவிட்ட மற்றும் பழைய போகம்பற சிறைச்சாலை ஆகியவற்றிலிருந்து கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15