தனிமைப்படுத்தப்படாமல் அப்ரிடிக்கு விளையாட அனுமதி

Published By: Jayanthy

27 Nov, 2020 | 09:54 PM
image

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடிக்கு இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது எல்.பி.எல் போட்டியில் திஸர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸை அப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ்  அணி எதிர்கொள்கின்றது.

இப் போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்காகா விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷஹித் அப்ரிடி புதன்கிழமை (25) இலங்கை வந்தார்.

இந்நிலையில்,இவருக்கு வெளிநாட்டு வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டாய 07 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் எல்.பி.எல் போட்டிகளில்  விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அப்ரிடி இலங்கைக்கான விமானத்தை திங்கட்கிழமை தவறவிட்டிருந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் மீது கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை காரணமாக  காலி கிளாடியேட்டர்ஸின் தொடக்க ஆட்டத்தை அப்ரிடி தவறவிடுவார் என முந்தைய போட்டி அமைப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

இருந்த போதிலும் காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர் நபீல் ஹாஷ்மி, அப்ரிடி  கொரோனாவிற்கான சிறப்பு சோதனைகளின் பின்னர் இன்றைய போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அப்ரிடிக்கு  பி.சி.ஆர் சோதனைகள் உள்ளிட்ட சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக எல்.பி.எல் போட்டிகளுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35