இலங்கை மருத்துவ சபைக்குள் ஏற்படுத்தப்பட்ட இருண்ட யுகத்தை இல்லாமல் செய்யவேண்டும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published By: R. Kalaichelvan

27 Nov, 2020 | 05:01 PM
image

(நா.தனுஜா)

இலங்கை மருத்துவ சபையின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுவிட்டதாகவும மருத்துவ சபையின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

எனவே அதன்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இலங்கை மருத்துவ சபைக்குள் ராஜித சேனாரத்னவினால் ஏற்படுத்தப்பட்ட இருண்ட யுகத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மருத்து அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே மற்றும் வைத்திய நிபுணர் ஷனேல் ஆகியோர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

1924 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருத்துவ சபை பிரதானமாக இரண்டு பொறுப்புக்களைக் கொண்டிருக்கின்றன. மருத்துவக்கல்வியின் தரத்தை உறுதிசெய்வதும் மருத்துவர்களின் தகைமையை உறுதிசெய்வதுமே அவையாகும்.

எனினும் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில் இலங்கை மருத்துவ சபை மருத்துவக்கல்வியினதும் மருத்துவர்களினதும் தரத்தை முறையாகப் பேணும் வகையில் செயற்படவில்லை என்பதை ஏற்கனவே நாம் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

குறிப்பாக சைட்டம் உயர்கல்வி நிறுவனம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டபோதுஇ ராஜித சேனாரத்ன அக்கல்வி நிறுவனத்திற்கு ஆதரவாக செயற்பட்டமை அனைவருக்கும் நினைவிருக்கும். அதேபோன்று மருத்துவக்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான மிகக்குறைந்த கல்வித்தகைமை நிர்ணயத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டதன் ஊடாக மருத்துக்கல்வியின் தரத்திலும் தாக்கம் ஏற்படுத்தப்பட்டது.

ராஜித சேனாரத்ன அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவருடைய தனிப்பட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் அரசியல் ரீதியில் நெருக்கமானவர்களும்  இலங்கை மருத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டனர்.

இலங்கை மருத்துவ சபையின் தற்போதைய தலைவர் பேராசிரியர் ஹரீந்திர சில்வாவும் ராஜித் சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்டார்.

அவரைப் பற்றி எமக்கும் ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சிற்கும் தனிநபர்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அவரது மேற்படிப்பின் போது உரிய விதிமுறைகளை மீறியமை குறித்தும் குழந்தை மருத்துவ பயிற்சியின் போது அவரால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல்கள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

இதுகுறித்து நாம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் முறைப்பாடு செய்தமையைத் தொடர்ந்துஇ அவர் இதுபற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கான 5 பேர்கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.

அந்தக் குழுவின் அறிக்கை தற்போது சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுவிட்டதாகவும் மேற்படி முறைகேடுகள் தொடர்பில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் அறியக்கிடைத்திருக்கிறது. எனவே அதன்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இலங்கை மருத்துவ சபைக்குள் ராஜித சேனாரத்னவின் இருண்ட யுகத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்றும் சுகாதார அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55