ஆட்சி மாற்றத்தின் பலனை அனைத்து மக்களும் பெற வேண்டும் - அனுராத ஜயரத்ன

Published By: Digital Desk 3

27 Nov, 2020 | 04:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மக்களுக்கு குறுகிய கால பயனை வழங்கும் நோக்கில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம்  தயாரிக்கப்படவில்லை.

ஆட்சி மாற்றத்தின் பலனை மக்கள்  நிரந்தரமாக பெற வேண்டும் . என்பதை கருத்திற் கொண்டு வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி பிரதான அமைச்சுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள் மற்றும்  நீர்தேக்கங்கள் ,நிர்மாண அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவது 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் பிரதான இலக்குகளுக்கு உள்ளது. தேசிய உற்பத்திகளை  மேம்படுத்த அதிக நிதி இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விவசாயத்துறை மற்றும் நீர்பாசன அபிவிருத்திக்கு எக்காலத்திலும் இல்லாத வகையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் அமையவில்லை என எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

வரவு - செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு குறுகிய கால நலனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல.

ஆட்சி மாற்றத்தின் பலனை மக்கள் நிரந்தரமாக பெற வேண்டும். என்ற தூர நோக்க கொள்கை அடிப்படையில்  வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை. நீதித்துறை தற்போது சுயாதீனமாகவே செயற்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32