முல்லைத்தீவில் பூட்டப்பட்ட வர்த்தக நிலையங்களை அச்சுறுத்தி திறக்க வைக்கும் நடவடிக்கை

27 Nov, 2020 | 02:17 PM
image

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு  மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரில் இன்று (27.11.2020) வணிக நிலையங்கள் அனைத்தும் பூட்டபட்டு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக மக்களால் அனுஷ்ட்டிக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில் பூட்டப்பட்ட வர்த்தக நிலையங்களை அச்சுறுத்தல் மூலம்  பலவந்தமாக திறக்கவைக்கும் நடவடிக்கையில்  இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை  காலை முதல் முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு நகரில் பெருமளவிலான ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலிஸார் பூட்டியிருக்கும் கடைகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு கடைகளை திறக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடைகளை நீங்கள் ஒருநாள் பூட்டலாம் ஆனால் 365 நாட்களுக்கும் இராணுவமே உங்களுக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளனர்.

மேலும்  புதுக்குடியிருப்பு வணிகர் கழக தலைவரை அழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் வணிகர்கழகம் அறிவித்தா கடைகள் பூட்டப்பட்டுள்ளன ? என விசாரித்துள்ளதுடன் தலைவரையும் அழைத்து சென்று பூட்டப்பட்ட கடை உரிமையாளர்களிடம் நேரடியாக  விசாரணை செய்துள்ளார்கள்.

வணிகர்கள் தங்கள் விருப்பின் பெயரில்தான் கடைகளை பூட்டியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் நேரடியாக பூட்டப்பட்டுள்ள வணிக நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்ட புதுக்குடியிருப்பு பொலிசார் கடையினை உடனடியாக திறக்குமாறும் இல்லாது பொலிஸ் நிலையம் அழைத்து முறைப்பாடு பதிவுசெய்யப்படும் என அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு நகரங்களில் பூட்டியிருக்கும் கடைகளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சுயவிருப்பின் பெயரில் கடைகளை பூட்டிய உரிமையாளர்களுக்கு தனிமனித சுதந்திரம்கூட இல்லாத நிலை காணப்படுகின்றதாக வர்த்தகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51